என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வாலிபர் மர்ம மரணம்"
தாளவாடி:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதி கர்நாடகா மாநில எல்லையில் தாளவாடி அருகே உள்ள கும்டாபுரத்தை சேர்ந்தவர் சங்கரப்பா (வயது 28).
இவர் கர்நாடக மாநிலம் மாண்டியாவில் உள்ள தனியார் கம்பெனியில் ஊழியராக பணி புரிந்து வந்தார்.
இந்த நிலையில் சங்கரப்பா விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்தார். வீட்டில் தாளவாடிக்கு போய் விட்டு வருவதாக கூறி சென்றார். ஆனால் அவர் வீட்டுக்கு வரவில்லை.
இந்த நிலையில் அவர் கும்டாபுரம் அருகே ரோட்டோரம் உள்ள கும்பேஸ்வரா கோவில் அருகே சங்கரப்பா மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது அருகே அவர் கொண்டு வந்த பை ஒன்று கிடந்தது. அதில் ஒரு டைரி, ஒரு சாக்லெட் இருந்தது. உடலில் எந்த வித காயமும் இல்லை.
அவர் தற்கொலை செய்திருப்பதாக கூறப்படுகிறது. எனினும் அவரது சாவில் மர்மம் இருப்பதாகவே கூறப்படுகிறது. போலீசார் விசாரணை நடத்தினால் தெரியவரும்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்கால் ஜெய்பீம் நகரை சேர்ந்தவர் தருமன். இவருடைய மகன் ராஜீவ்காந்தி (வயது25). தருமன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.
ராஜீவ்காந்தி வேலைக்கு எதுவும் செல்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ராஜீவ் காந்தியை காணவில்லை. ராஜீவ் காந்தி அடிக்கடி தன்னுடைய அக்கா வீட்டிற்கு சென்று வருவது வழக்கம்.
ஆனால் ராஜீவ்காந்தி அக்கா வீட்டிற்கு செல்ல வில்லை என தெரியவந்தது. இதையடுத்து ராஜீவ் காந்தியின் உறவினர்கள், நண்பர்கள் வீட்டிற்கு சென்றாரா என தேடினர் ஆனால் கிடைக்கவில்லை
இது குறித்து திருவண்ணாமலை கிழக்கு போலீசில் ராஜீவ்காந்தி உறவினர்கள் புகார் அளித்தனர். இந்த நிலையில் நேற்று மாலை வேங்கிகால் பஞ்சாயத்து அலுவலகம் அருகேயுள்ள கிணற்றில் பிணமாக மிதந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த திருவண்ணாமலை கிழக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கிணற்றில் மிதந்த ராஜீவ்காந்தி சடலத்தை மீட்டனர்.
அப்போது உடல் முழுவதும் மீன்கள் கடித்து உடல் அழுகிய நிலையில் இருந்தது. பிணத்தை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்குபதிவு செய்து ராஜீவ்காந்தியை யாராவது கொலை செய்து கிணற்றில் வீசினார்களா? அல்லது தவறி விழுந்து இறந்தாரா, தற்கொலை செய்தாரா? என்ற கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சூலூர்:
தர்மபுரியை சேர்ந்தவர் அன்பரசு (27). இவர் கோவை புதூரில் உள்ள செல்போன் கடையில் வேலை பார்த்து வந்தார். இவரது நண்பர்கள் பாலா, ஜீவா ஆகியோர் சூலூர் பஸ் நிலையம் அருகே வீடு வாடகைக்கு எடுத்து தங்கி கருமத்தம் பட்டியில் வேலை பார்த்து வருகிறார்கள்.
இவர்களுடன் கல்லூரி மாணவர்கள் உள்பட 21 பேர் அதே காம்பவுண்டில் தங்கி உள்ளனர்.
இவர்கள் அனைவரும் பார்ட்டி வைத்தனர். இதற்காக அன்பரசுவையும் அழைத்து இருந்தனர். அவரும் சென்று இருந்தார். நேற்று இரவு அவர்கள் மொட்டை மாடியில் அமர்ந்து பேசி கொண்டு இருந்தனர்.
திடீரென வாலிபர் அன்பரசு மாடியில் இருந்து கீழே விழுந்து இறந்து கிடந்தார்.
இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் சூலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் அங்கு விரைந்து சென்று அன்பரசு உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
அன்பரசு மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்தாரா? அல்லது அவரை நண்பர்கள் யாராவது மாடியில் இருந்து தள்ளி விட்டு கொன்றார்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விழுப்புரம்:
விழுப்புரம் அருகே உள்ளது அத்தியூர் திருவாதி. இங்கு தென்பெண்ணையாறு ஓடுகிறது.
இந்த ஆற்றின் கரையோரம் இன்று காலை 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். அந்த வழியாக சென்றவர்கள் இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் இது குறித்து விழுப்புரம் தாலுகா போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் ராஜன், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தன், ஞானசேகர் மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்தனர்.
ஆற்றங்கரையோரம் பிணமாக கிடந்த வாலிபரின் உடலை பார்த்தனர். அந்த வாலிபர் பேண்ட்-சட்டை அணிந்துள்ளார். அவர் யார்? எந்த ஊர்? என்ற விவரம் தெரியவில்லை.
மேலும் அவரது உடலில் காயங்கள் எதுவும் இல்லை. அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறுயாராவது அவரை கொலை செய்து உடலை இங்கு வீசி சென்றார்களா? என்ற விவரம் தெரியவில்லை.
பின்னர் அந்த வாலிபரின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோத னைக்காக முண்டியம் பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வாலிபரின் மர்மசாவு குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தை அடுத்த செம்பேரி கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 24). விவசாயி.
இவர் நேற்று மாலை பெண்ணாடத்துக்கு செல்வதாக கூறி விட்டு வீட்டில் இருந்து தனது மொபட்டில் புறப்பட்டு சென்றார்.
பெண்ணாடம் மாளிகை கோட்டம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு வேல்முருகன் சென்றார். அங்கு மது வாங்கி குடித்த அவர் திடீரென்று மயங்கி விழுந்தார். அப்போது அந்த வழியாக மாளிகை கோட்டத்தை சேர்ந்த வேல்முருகனின் நண்பர் விமல் மினி லாரியில் வந்தார்.
டாஸ்மாக் கடை அருகே மயங்கி கிடந்த வேல்முருகனை பார்த்ததும் விமல் மினி லாரியை விட்டு கீழே இறங்கி அவரையும், மொபட்டையும் மினி லாரியில் ஏற்றிக் கொண்டு வேல்முருகனின் வீட்டுக்கு சென்றார்.
வீட்டில் இருந்தவர்களிடம் நடந்த விவரத்தை விமல் கூறினார். பின்னர் அவர்கள் வேல்முருகனை மினி லாரியில் இருந்து கீழே இறக்கியபோது அவர் இறந்து விட்டதை அறிந்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த வேல்முருகனின் குடும்பத்தினர் வேல்முருகனின் உடலை பார்த்து கதறி அழுதனர். பின்னர் இது குறித்து வேல்முருகனின் பெற்றோர் பெண்ணாடம் போலீசில் புகார் செய்தனர். அதில் தனது மகனின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளனர்.
புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வேல்முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வேல்முருகனின் நண்பர் விமலை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதுகுளத்தூர்
முதுகுளத்தூர் அருகே உள்ள கீழக்கன்னு சேரியைச் சேர்ந்தவர் உடையார். இவரது மகன் பாலமுருகன் (வயது 22). இவரை கடந்த 3 நாட்களாக காணவில்லை. அதிர்ச்சியடைந்த பெற்றோர் பல்வேறு இடங்களில் பாலமுருகனை தேடினர். பலன் இல்லை. எனவே கீழத்தூவல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான பாலமுருகனை தேடி வந்தனர்.
இந்த நிலையில் அவர் கீழக்கரை சேரியில் உள்ள கண்மாயில் அழுகிய நிலையில் பிணமாக கிடப்பது தெரியவந்தது. தகவல் தெரிந்ததும் இன்ஸ்பெக்டர் இளவரசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்குச்சென்று விசாரணை நடத்தினர். பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முதுகுளத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பிரேத பரிசோதனைக்குப் பின்னர் தான் பாலமுருகன் எப்படி இறந்தார்? என்பது தெரியவரும்.
கும்பகோணம்:
கோவில் நகரம் என்றழைக்கப்படும் கும்பகோணத்துக்கு வெளியூர் பயணிகள் அதிக அளவில் வந்து செல்வது வழக்கம். இதையொட்டி கும்பகோணம் பகுதியில் குற்றச்செயல்களும் அதிக அளவில் நடந்து வருகின்றன. சிலர் போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து விட்டு சமூக விரோத செல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்டான். இந்த பரபரப்பு அடங்கும் முன்பு கும்பகோணம் பஸ்நிலையம் பின்புறம் வாலிபர் மர்மமாக இறந்து கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு:-
கும்பகோணம் பஸ் நிலையத்தின் பின்புறம் உள்ள ஜான் செல்வராஜ் நகரில் ஒரு ஆண்பிணம் கிடப்பது நேற்று மாலை தெரியவந்தது. அந்த நபர் ஜட்டி மட்டும் அணிந்து இருந்தார். 35 வயது மதிக்கத் தக்க அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எப்படி இறந்தார்? என்பது மர்மமாக உள்ளது. அவர் உடலில் காயம் இல்லை.
வாலிபர் ஒருவர் பிணமாக கிடப்பதை கண்ட பொதுமக்கள் கும்பகோணம் மேற்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆண்பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பஸ் நிலையத்துக்கு வந்த வாலிபரை மர்ம நபர்கள் கொலை செய்து அவரது உடமைகளை எடுத்து சென்று விட்டார்களா? என்பது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பஸ் நிலையம் பின்புறம் வாலிபர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் கும்பகோணத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜபாளையம்:
ராஜபாளையம் அருகே உள்ள மேலஆவரம் பட்டியைச்சேர்ந்தவர் மாடசாமி (வயது 26). டிராக்டரில் மணல் ஏற்றும் லோடு மேனாக பணியாற்றி வந்தார். நேற்று இரவு மாடசாமியை அம்மன்பொட்டல் தெரு வைச்சேர்ந்த பால்பாண்டி, மேல ஆவரம்பட்டியைச் சேர்ந்த கணேஷ்குமார், முத்துகிருஷ்ணன் ஆகியோர் அழைத்துச் சென்றனர்.
இந்த நிலையில் டிராக்டரில் இருந்து தவறி விழுந்ததில் மாடசாமிக்கு தலையில் காயம் ஏற்பட்டது என்று கூறி மாடசாமியை அவரது வீட்டுக்கு கொண்டு வந்தனர். அப்போது அவர் மயங்கிய நிலையில் இருந்தார்.
அதிர்ச்சியடைந்த மாடசாமியின் மனைவி ராமலட்சுமி மற்றும் உறவினர்கள் மாடசாமியை ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு மாடசாமியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து ராமலட்சுமி ராஜபாளையம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பார்த்திபன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்